உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஹெராயினுடன் இளைஞன் ஒருவர் கைது

2 கிலோ 500 மில்லிகிராம் ஹெராயினுடன் இளைஞன் ஒருவர் வீரகுல, தெமட்டலந்த விளையாட்டு மைதானம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26) காலை 8.15 மணியளவில் சோதனை நடத்தப்பட்டபோதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெமட்டலந்த பிரதேசத்தை சேர்ந்த 24 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று அத்தனகள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸாரால் மேற்கொள்ளவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க