இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை அமெரிக்காவுக்குக் கிடையாது என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கை குடியுரிமை கொண்டவராக, கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமையைக் கொண்டுள்ளார்.
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள, குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இல்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டியது கட்டாயமில்லை. அதனை அமெரிக்க தூதரகமே உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை குடிமகனாக, கோத்தாபய ராஜபக்ச இலங்கை கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கோத்தாபய ராஜபக்ச மகிழ்ச்சியாக இல்லை எனவும் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க