உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சஜித் வேட்பாளர் இல்லையேல் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்’

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை உத்தியோகப்பூர்வமாக 30ம் திகதி அறிவிக்காவிடின் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாற்று தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எச்சரித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனநாயக தேசிய முன்னணி இம்மாதம் 30ஆம் திகதி உதயமாகவுள்ளது.

இதன் போது ஐக்கிய தேசிய கட்சயின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்க வேண்டும் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கையினை எழுத்து மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக உள்ள நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக எங்களின் பதவிகளை இழக்கவும் தயாராக இருக்கிறோம்.

மாத இறுதிக்குள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படாவிட்டால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்குவதற்காக மாற்று தீர்வுகளை எடுக்க வேண்டி நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க