பொன்மொழிகள்

கற்காதது உலகளவு! ஔவையார்

  • முறையான பயிற்சியினால் சித்திரம் வரையப் பழகலாம். நாவின் பயிற்சியால் செந்தமிழில் பேச முடியும். மனப்பயிற்சியால் கல்வியில் தேர்ச்சிபெறலாம். ஆனால், நண்பர்களிடம் உண்மையான நட்புடன் பழகுதல், உயிர் இரக்கம் காட்டுதல், இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்தல் ஆகிய நற்குணங்கள் ஒருவனுக்கு பிறவியிலேயே அமையவேண்டும்.
  • உள்ளத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி அவற்றை அடிமையாக்குவதே வீரம். அழியாத கல்வியே நிலையான செல்வம். பிறருக்கு அடிமையாகாமல் சுயமாக சம்பாதித்து உண்பதே உயர்ந்தது.
  • நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள் இந்த பரந்த பூமியைப் போல எவ்வளவோ இருக்கின்றன. அதனால் படித்து விட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது.

 

 

கருத்து தெரிவிக்க