பொத்துவில் ஆலையடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12மணிக்கு கொடியேற்றத்துடன் பக்தர்கள் புடைசூழ பக்தியுடன் ஆரம்பமானது.
மகோற்சவ பிரதமகுரு பிரதிஸ்டாகலாநிதி, பிரதிஸ்டாகலைமாமணி, பிரதிஸ்டாஇளவரசன், தற்புருஷசிவாச்சாரியார் சிவஸ்ரீ சன்முகவசந்த குருக்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வைரவர் பூசையுடன் இனிதே நிறைவடையவுள்ளது.
இதேவேளை, திருவிழா இடம்பெறும் 10 நாட்களும் தொடர்ச்சியாக எம்பெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கவுள்ளார்.
இதன்படி, இன்றைய முதலாம் நாளும் விநாயகப்பெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி சிவன் உமை சமேதரராய் முருகப்பெருமான் அகிதம் வலம் வந்து நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அருள் வழங்கியிருந்தார்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஆலயத்தில் முதல்முறையாக இம்முறை கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.
கருத்து தெரிவிக்க