புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இறுதிச்சுற்று பேச்சு நாளை மறுதினம் (26) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இரு தரப்புகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என்றும், கூட்டாக பயணிப்பதா அல்லது தனித்தனியே பயணிப்பதா என்பது குறித்து இதன்போது முடிவெடுக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.
இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடனும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
பதவி பங்கீடு தொடர்பில் இதன்போது பச்சைக்கொடி காட்டப்படும் பட்சத்திலேயே மஹிந்த, மைத்திரி சந்திப்பு இடம்பெறும் என சுதந்திரக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கருத்து தெரிவிக்க