லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒரு சுற்றுலா குழு நேற்று முன்தினம் மாலை தலைநகர் வியன்டியனில் இருந்து லுவாங் பிரபாங் நகருக்கு சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா உதவியாளர் ஒருவர் உள்பட சீனாவை சேர்ந்த 43 பேரும், லாவோஸ் நாட்டை சேர்ந்த சாரதி மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரும் இதில் பயணித்தனர்.
லுவாங் பிரபாங் நகருக்கு அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து , கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையில் இருந்து விலகி சாலையோரத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து, காவல்துறை மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. 31 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் மாயமாகி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க