பயணிகளுக்கு மிகவும் வசதியான தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதிக்கு 2,000 பேருந்துகளை வழங்க தீர்மானம் செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில். உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை கோருவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
[2019.08.20 ] நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, குறித்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க