கொழும்பு செய்திகள்புதியவை

அமெரிக்க மிலேனியம் உடன்படிக்கையில் கைச்சாத்திட கால அவகாசம் தேவை- ஜனாதிபதி

அமரிக்காவுடனான மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உதவிதிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட எதிர்வரும் ஜனவரி வரை கால அவகாசம் தேவை என்று ஜனாதிபதி மைத்ரிபால தெரிவித்துள்ளார்

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போது இந்த உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியபோதே ஜனாதிபதி இந்த பதிலை வழங்கினார்.

இந்தநிலையில் மிலேனியம் திட்டத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக அமரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

மிலெனியம் செலெஞ் கோப்பரேசன், யுஎஸ்எய்ட்டை போன்று ஒரு உதவி நிறுவனமாகும்.

இதற்கான நிபந்தனைகள் கடுமையானவையல்ல என்றும் டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க