உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இராணுவ தளபதி நியமனம்? ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படும்- அமரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை, அமரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பையும் முதலீடுகளையும் பாதிக்கும் என்று அமரிக்காவின் ராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிப்போரின்போது போர்க்குற்றம் புரிந்தததாக சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
எனினும் அதனைக்கருத்திற்கொள்ளாமல் வரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இராணுவத்தளபதியாக நியமனம் செய்துள்ளார்.

இந்த செயலை ஏற்கனவே அமரிக்கா கண்டித்திருந்தது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு நல்லிணக்க செயற்பாடுகளை பாதிக்கும் என்றும் ராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல் ரீதியான செயற்பாடு என்று குறிப்பிட்டுள்ள அவர் தேசியவாதத்தை வைத்துக்கொண்டு விளையாடுவதன் மூலம் நன்மைகளை பெறமுடியும் என்று சில அரசியல்தரப்புக்கள் நம்புவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் ஒருக்கட்டமாகவே மனித உரிமைகளை மீறிய ஒருவருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறிய ஒருவர் இராணுவத்தளபதியாக இருக்கும் போது எந்தளவு இராணுவ ஒத்துழைப்பை இலங்கையுடன் மேற்கொள்ளமுடியும் என்பதற்கு வரையறையை வகுக்கவேண்டியுள்ளது.

அதேவேளை இலங்கையில் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ள 480 மில்லியன் டொலர்கள் உதவியில் சவேந்திர சில்வாவின் நியமனம் பாதிப்பை உண்டாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க