ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று [20.08.2019]அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே ஆகக்குறைந்த திருமண வயது 18 உட்பட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின்படியே இலங்கையில் முஸ்லிம்களின் திருமணங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க