இலங்கையின் புதிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக நிரூபிக்கக்கூடிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நியமனத்தின் மூலம் நல்லிணக்க நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டுள்ளன. என்றும் கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதிப்போரின்போது 58வது படைப்பிரிவின் தளபதியாக பதவிவகித்த சவேந்திர பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க