உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பரசூட் பயிற்சியின் போது சிப்பாய் ஒருவர் பலி

அம்பாறை, உகன இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் விஷேட படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சிப்பாய் இன்று காலை விமானப்படை தளத்தில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

பலத்த காயமடைந்த சிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க