உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சவேந்திராவின் நியமனத்தினால் குழப்பநிலை- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்.

இலங்கையில் போர்க்குற்றவாளி இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமையை குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆணையாளர் மிச்செய்ல் பெச்செலெட் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா பதவியுயர்த்தப்பட்டமையானது, இலங்கை நீதியை நிலைநாட்டுவதிலும் பொறுப்புக்கூறுதிலும் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

போர் காலத்தின்போது சவேந்திர சில்வா மேற்கொண்டதாக கூறப்படும் மனித உரிமைக்குற்றங்கள் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அவரை இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமித்தமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்செலெட் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க