” அனைவரும் இணைந்து கூட்டணி அமைத்து ஐக்கியமாக பயணித்தால் ஜனாதிபதி தேர்தலை இலகுவில் வெற்றிபெறமுடியும்.” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுடன் அலரிமாளிகையில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. நாம் அனைவரும் இணைந்து கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ளவேண்டும்.
இந்த அரசாங்கத்தால் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை குறித்து எவரும் கதைப்பதில்லை. எனவே, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், எமக்கு நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கினால் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளைவிட பத்து மடங்கு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” என்றும் பிரதமர் கூறினார்.
கருத்து தெரிவிக்க