பொன்மொழிகள்

கடவுளருள்! கிருபானந்த வாரியார்

  • தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்.
  • எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை. ஏனெனில், கடவுள் வழிபாடு ஒன்றே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்ந்தகதிக்கு அழைத்துச் செல்கிறது.
  • எல்லா உயிர்களிடமும் தூய அன்பு செலுத்தினால் மட்டுமே, கடவுளின் அருளைப் பெற முடியும்.

கருத்து தெரிவிக்க