ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்காது. நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்தும். என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆளும் தரப்பினருக்கு எதிராக செயற்படுவதற்கு சுதந்திர கட்சிக்கு எதிரணியினருடன் இணைவதை தவிர வேறு வாய்ப்புக்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பினை கருத்திற் கொண்டே எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டுள்ளார் என ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடியது.
இன்று தேசிய பாதுகாப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட பிணக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாது.
புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ களமிறக்கப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க