மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சட்டம் குறித்த தீர்மானத்தை வெளியிடுவதற்கு தலைமை நீதிபதி அவர் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதி குழுவை நியமித்துள்ளார்.
தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய, நீதிபதிகள் புவனேக அலுவிஹார , சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட , மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் (திருத்தம்) சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசார பிரதிநிதித்துவம் (பிஆர்) முறையின் கீழ் தேர்தல்களை நடத்த முடியுமா என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் தீர்மானத்தை கோரியிருந்தார்.
இதற்காகவே குறித்த நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்மானம் இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க