முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புவிச்சரியவியல் அளவியல் தலைமைப் பணியக அதிகரிகள் உள்ளிட்டோர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு- கேப்பாப்புலவு,நந்திக்கடல் கள்ளியடி மற்றும் பாவடைகல் ஆற்றுப்பகுதி ,இருட்டுமடு, மூங்கிலாறு சுதந்திரபுரம் போன்ற பகுதிகளிற்கு இந்த விஜயம் மேற்கொள்ளபட்டுள்ளது.
இதன்போது நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டு அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். அத்தோடு குறித்த பிரச்சனைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என தெரிவித்துள்ளனர்.
மணல் அகழ்வு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்தவிடயம் தொடர்பில் சம்மந்தப்படட அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி செயலகத்துக்கும் குறித்த விடயம் கொண்டுசெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க