பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
பிரதமர் ரணில் வவுனியாவிற்கு இன்று பிற்பகல் செள்றுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டக்காரர்கள் வீதியை மறித்த நிலையில் வவுனியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி என். பி வெலிகள போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து காணாமல் போன உறவுகளின் போராட்ட களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக காவல் துறையினரின் வாக்குறுதி வழங்கியதையடுத்து காணாமல் போன உறவுகள் தமது போராட்ட களத்திற்குத் திரும்பியுள்ளனர்.
இன்று மாலை 3.00மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு சொப்பர் விமானத்தில் அமைச்சர்களுடன் வந்திறங்கியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக போராட்ட களத்தினூடாக செல்லும் பிரதான கண்டி வீதி பயணத்தை தவிர்த்து வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக அவர் இலுப்பையடி வைத்தியசாலையினை சென்றடைந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாகவே பிரதமர் மாற்று வழியைப் பயன்படுத்தி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களினால் இன்றுடன் 907 ஆவது நாளாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க