கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையின் கையை தாய் இறுக பிடித்தபடி இறந்து கிடந்த உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளதோடு இந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த ஜூனில் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள கொட்டக்குன்னு என்ற இடத்தில் உள்ள வாடகை வீடு சரிந்துள்ளது.
தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சென்று அங்கு சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பல மணிநேர தேடுதலின் பின் (வயது 21) தாய் ஒருவரும் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
நிலச்சரிவு ஏற்பட்டவுடன் கடும் வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். இதில் தனது குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து சென்று விடாமல் இருப்பதற்காக குழந்தையின் கையை குறித்த இறுக பிடித்து கொண்டு இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க