உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

‘ சிறிகொத்தவுக்கு செல்கிறார் தயாசிறி’

” ஐக்கிய தேசியக்  கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரராகவே தயாசிறி ஜயசேகர செயற்பட்டுவருகின்றார்.”  என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோகித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் பங்கேற்க சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சி உறுப்பினர்களான பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால், கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகிறார்.

சிறிகொத்தவுக்கு சென்று, அங்கு வழங்கப்படும் நிகழ்ச்சி நிரலையே தயாசிறி ஜயசேகர நிறைவேற்ற முயற்சிக்கின்றார். இதன் ஓர் அங்கமே ஒழுக்காற்று நடவடிக்கை குறித்த  எச்சரிக்கையாகும்.” என்றார்.

அதேவேளை,  தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசியென டிலான் பெரேராவும் விமர்சித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க