நாட்டிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர் குழுவிடம் நாட்டின் நிலவரம் தொடர்பாக தெளிவுபடுத்திய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் மக்களில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது ஒரு கபடச் செயலாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.
அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது அவை அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டிற்கு முக்கிய தேவை ஜனாதிபதி தேர்தல் அல்ல ஒரு புதிய அரசியலமைப்பே தேவை ” என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க