உள்நாட்டு செய்திகள்புதியவை

ஒரு வாரத்துக்குள் 200 மெட்ரிக் தொன் கழிவுகள் குவிப்பு!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரகாலப் பகுதிக்குள் சுமார் 200 மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான கழிவுகள் குவிந்துள்ளதாக கொழும்பு மாநாகர சபை பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால் தெரிவித்தார்.

சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரப்படத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 80 வீதமான கழிவு சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கொழும்பு பகுதியில் சேரும் கழிவுகளை அருவக்காலு பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகளின் போது புத்தளம் பிரதேச வாசிகளினால் எதிர்ப்பு தெரிவிக்க பட்டதை அடுத்து பொலிஸ் பாது காப்புடன் அந்த பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்த செயற்பாட்டுக்கு 40 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக நாளொன்றிற்கு சுமார் 35,000 ரூபா வரையில் செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க