கொம்பனிதெருவில் உள்ள முத்தையா வீதியில் இன்று (ஓகஸ்ட் 12) அதிகாலையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேபிள் வீதியில் அமைந்துள்ள ஒரு முடி திருத்தும் சலூன் ஒன்றின் முகாமையாளர் ஒருவரே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஒரு இளம் பெண்ணுடன் ஸ்டேபிள் வீதிக்கு சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் ஐவரும் இருபெண்களையும் கிண்டல் செய்ததைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் காயமடைந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 முதல் 24 வயது வரையிலானவர்கள் எனவும் இவர்கள் யூனியன் பிளேஸ், கண்டி மற்றும் போல்கசோவிட்டாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க