உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரண்டு இளம் கடினப்பந்து கிரிக்கெட் அணிகள் ஆரம்பித்து வைப்பு!

மட்டக்களப்பில் கடினப்பந்து கிரிக்கெட் விளையாட்டை உயர்வடையச் செய்யும் நோக்குடன், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தினால் புலம்பெயர்ந்து வாழும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்ட இளம் இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அணிகள் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் சிவநாதன் தலைமையில், மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் அணித்தலைவர் பந்துல வர்ணபுர பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய இரு அணிகளை ஆரம்பித்துவைத்ததுடன் இவ் இளம் வீரர்களுக்கு தனது ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும் இதன்போது பயிற்றுவிப்பாளர் நியமனங்களும் வழங்கப்பட்ட துடன் விளையாட்டு வீரர்களுக்கு காலணிகள், சீருடைகள் போன்றவையும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், செயலாளர் எஸ்.அருள்மொழி பொருளாளர் ரஞ்சன், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் சடாற்சரராஜா பொருளாளர் தயாசிங்கம் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி காசிப்பிள்ளை புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வருகை தந்த ரமேஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

கருத்து தெரிவிக்க