ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச நாளை பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இழுபறிநிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சஜித் பிரேமதாசவை போட்டியில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் அணியினரின் சார்பில் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ நாளை பதுளையில் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான இந்த பேரணி, சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைப் பேரணியாக இதனை நடத்துவதாக, அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசத்துக்கு அறிவித்துள்ளார்.
எனினும், இந்த மாநாட்டில் கட்சியின் நடத்தை விதிகளை மீறினால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐதேக பொதுச்செயலர் எச்சரித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க