இரு நோக்கங்களை அடிப்படையாக வைத்து இன்றைய பொதுஜன பெரமுன கட்சியின் பொதுக் கூட்டம் இடம்பெறுவதாக அக்கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் திலும் அமுனுகம எம்.பி. தெரிவித்துள்ளார்.
இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவத்தை பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் இருந்து எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்கப் போகின்றார்.
இந்த இரு பிரதான நடவடிக்கைகளுக்காகவுமே இன்றைய பொதுக் கூட்டம் நடைபெறுவதாகவும் திலும் அமுனுகம எம்.பி. மேலும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க