உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு’

வவுனியாவில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதாக தெரிவித்து பணம் பறிக்கும் குழு செயற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் அண்மையில் செயற்பட தொடங்கியுள்ள அமைபொன்றே இவ்வாறு மாணவர்களின்; வெளிக்கொணர்வதற்கான தளத்தினை தாம் அமைத்து தருமாவதாகவும் அதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்து நிகழ்வொன்றினை நேற்று (10.8) ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியாவில் உள்ள ஆலய மண்டபமொன்றில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த மாணவர்களுக்கு 300 ரூபா வீதம் அறவிடப்பட்டதாகவும் அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதுடன் அதனையும் மீளப்பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த நிகழ்விற்காக அழைக்கப்பட்ட முக்கிய விருந்தனர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனவும் இந் நிகழ்வு பணம் சேகரிக்கும் நிகழ்வாக நடந்து முடிந்துள்ளது எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே இவ்வாறாக கட்டணம் செலுத்தி நடத்தப்படும் நிழக்வுகள் தொடர்பில் நகரசபை மற்றும் பிரதேச செயலகம் என்பன கவனம் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த நிகழ்வை நடத்திய நிறுவனத்தினை சார்ந்த ஒருவரிடம் கேட்டபோது,

குறித்த நிறுவனம் கம்பனிகள் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அவர் நிகழ்வுக்கு பணம் அறவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் பங்குபற்றுனர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்திற்கு மேலதிகமாக சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்ததுடன் சுமார் 600 பேர் வரையில் பங்குபற்றியவர்களில் ஓரிருவர் தமக்கு சாதகமாக தீர்ப்பு நடுவர்களால் வழங்கப்படவில்லை என்பதனால் தவறான தகவலை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

தமது நோக்கம் சமூக சேவையாக இருந்தாலும் சில செலவுகளுக்காக பணம் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க