உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஒப்பந்தங்கள் மூலம் அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுக்கின்றது’

நாட்டை ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள் அண்மைக்கால சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை காட்டிக்கொடுத்துள்ளதாக  மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுடன் செய்துகொண்ட எக்டா ஒப்பந்தத்தை இந்த அரசாங்கமும் நீடித்து அமெரிக்காவுக்கு நாட்டை காட்டிக்கொடுத்திருக்கின்றது.

வெளிநாட்டு ஒப்பந்தங்களை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது ஆதரிக்கவும் முடியாது. ஒப்பந்தங்களை செய்யும்போது அதில் நாட்டுக்கு கிடைக்கும் நன்மை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும்.

அதேபோன்று செய்துகொள்ளப்போகும் ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவையின் அனுமதி பெறப்படுவதுடன்நாடாளுமன்றத்துக்கும் அதனை சமர்ப்பிக்கவேண்டும். இதன் போதே அதுதொடர்பில் பிறரின் அபிப்பிராயங்களை அறிய முடியும்.

நாடாளுமண்டத்துக்கு தெரியாமல் 2007 இல் எட்கா ஒப்பந்தம் மூலம் ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்ததுபோல் 2017இல் எட்கா ஒப்பந்தத்தின் காலத்தை நீடித்ததன் மூலம் மைத்திரி, ரணில் அரசாங்கமும் காட்டிக்கொடுத்துள்ளது.

அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை நீடித்திருக்காவிட்டால் அமெரிக்காவுடன் கலந்துரையாடி நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் மாற்றியமைத்திருக்க முடியும். அந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க