பொத்துவில் பிரதேச சபைக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்திக்கான நிதியில் இருந்து தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் ந.சசிதரன் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மாகாண சபையால் 2019ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், வீதிகளுக்கான பதாதைகள் அமைப்பு தொடரிலும் குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்திருந்தார்.
குறித்த நிதிவழங்கள் நடவடிக்கை திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு விடயத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
கொள்கைகளுக்கு அப்பால் சென்று அபிவிருத்தி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய போதும் ஐ.தே.க.வால் இவ்வாறு தமிழர்கள் புறக்கணிக்கப்படுக்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் ந.சசிதரன் கூறினார்.
கருத்து தெரிவிக்க