சவுதி அரேபிய அரசு அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் வைத்தியர்கள் தொடர்பில் சவுதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக அல்ல என்பதால் அங்கு எம்.எஸ்., எம்.டி காரகிகளி பூர்த்தி செய்து சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை இதையடுத்து சுகாதார சிறப்புகளுக்கான சவுதி ஆணையம் (எஸ்.சி.எப்.எச்.எஸ்) அங்குள்ள பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளன.
சவுதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவு நூற்றுக்கணக்கான வைத்தியர்களை வேலையிழக்க செய்துள்ளது.
கருத்து தெரிவிக்க