உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யாழ் மாவட்டத்தில் மாதிரிக்கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு

யாழ் மாவட்டத்தில் மாதிரிக்கிராமங்கள் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் நிர்மாணிக்கப்பட்ட செந்தமிழ் கிராமம் மற்றும் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் நிர்மாணிக்கப்பட்ட திருவேரபுரம் மாதிரிக்கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்ற இடம்பெறவுள்ளது.

இதன் போது 244 ஆவது மாதிரிக் கிராமமான செந்தழிழ் கிராமம் காலை 8.00 மணிக்கும் 245 ஆவது மாதிரிக் கிராமமான திருவேரபுரம் மாதரிக்கிரம் முற்பகல் 11.00 மணிக்கும் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

செந்தமிழ் மாதிரி கிராமத்தில் 24 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் வழங்கல் மற்றும் 36 இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி செய்யப்பட்ட 24 காணி துண்டுகளுக்கான உரிமையினை வழங்கல் எனபன இதன் போது இடம்பெறவுள்ளது.

திருவேரபுரம் மாதிரிக்கிரமத்தில் 20 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப்பத்திரம் வழங்கல் , 20 இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி செய்யப்பட் 20 காணி துண்டுகளுக்கான உரிமையினை வழங்கல், பயனாளிகள் 50 பேருக்கு விசிறிகடன் காசோலை வழங்கல், வீடமைப்பு கடன் காசோலை வழங்கல் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பத்தகங்களை வழங்கல், சில்ப சவிய பயிற்சியாளர் 242 பேருக்கு நன்மைகளை வழங்கல் மற்றும் கண் பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கல் என்பன இதன்போது இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க