உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

விசர்நாய்க்கடி நோயை இலங்கையில் முற்றாக ஒழிக்க திட்டம்

விசர்நாய்க்கடி நோய் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்றும் குணப்படுத்த முடியாத நோயாகும்.கடந்த ஆண்டு இலங்கையில் இந்த விசர்நாய்க்கடி நோயினால் 25 பேர் உயிரிழந்தனர்.

2025ம் ஆண்டளவில் இலங்கையை விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழித்த நாடாக மாறுவதற்கு திட்டமிட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் இந்த நோய்த் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் சுமார் 55 ஆயிரம் பேர் உள்ளாகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும், இது 2025 ஆம் ஆண்டளவில் வெற்றியளிக்கும் எனவும் அனில் ஜாசிங்ஹ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க