இந்திய கிரிக்கட் வீரர் டோனி அடுத்த இரண்டு மாதங்களுக்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட வேண்டி கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கினார்.
அதனால் மேற்கிந்திய தீவுகள் தொடரில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் கேர்னல் என்ற பதவியில் இருக்கும் டோனிக்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட எளிதாக அனுமதியும் கிடைத்தது.
இதனையடுத்து டோனி ஜூலை 30 முதல் 16 நாட்களுக்கு காஷ்மீரில் இராணுவ பணியில் ஈடுபட்டு வருகிறார்.
106 டிஏ என்னும் தரைப்படையுடன் ஆகஸ்ட் 15 வரை டோனி காஷ்மீரில் இருப்பார்.
இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதனால், காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீரில் பரபரப்பான சூழ்நிலை நிலவும் நிலையில் தோனி பாரமுல்லா பகுதியில் இராணுவத்தினருடன் பொது மக்கள் இருக்கும் பகுதி அருகே சென்று உள்ளார்.
அங்கே தோனிக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
அவருக்கு சில காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி உள்ளனர்.
தங்கள் எதிர்ப்பை குறிப்பாக உணர்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியை குறிப்பிட்டு, “பூம் பூம் அப்ரிடி” என அவரது பட்டப் பெயருடன் சேர்த்து கோஷமிட்டனர்.
இந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி ஒன்று பாகிஸ்தானில் பரவி வருகிறது
கருத்து தெரிவிக்க