உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் மண்ணை போட்டுவிட்டு மணல் கடத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் பனிக்கன்குளம் கிராமத்திலிருந்து கொக்காவில் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தொடரூந்து வீதிக்கு இரவு நேரங்களில் டிப்பர்களில் மண் ஏற்றி கொண்டு சென்று வீதிக்கு குறுக்காக மண்ணை போட்டுவிட்டு மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த மணல் கடத்தல் சம்பவம் காரணமாக தொடரூந்து வீதி பாதிக்கப்படுவதோடு தொடரூந்துகள் வந்து விபத்துக்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு

எனவே இந்த விடயம் தொடர்பில் மணல் கொள்ளை இடம்பெறுகின்ற போதும் மாங்குளம் காவல்துறையினர் இந்த விடயம் தொடர்பில் கண்டு கொள்ளவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் நாளாந்தம் தொடரூந்து கடவைக்கு குறுக்காக போடப்படுகின்ற மண் அடுத்த நாள் காலையில் தொடரூந்து பாதையில் பணியாற்றுகின்ற ஊழியர்களால் எடுக்கப்படுகின்ற போதும் மீண்டும் அடுத்த நாள் இரவு அதேபோன்று போடப்பட்டு மணல் கடத்தல் இடம்பெற்று வருகின்றது

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு உரிய தரப்புகள் இவ்வாறான மணல் கொள்ளையர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்படுகிறது

கருத்து தெரிவிக்க