*இரவு 7.47 மணிக்கு தெரிவுக்குழு விசாரணை நிறைவுபெற்றது.
*சஹ்ரானின் போதனைகள் தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்ததால் அது தென்னிந்தியாவுக்கும் பரவி அச்சுறுத்தலாக மாறியது.
* நாட்டில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இயல்புநிலை வழமைக்கு திரும்பியுள்ளது.
*சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் விழிப்பாகவே இருக்கின்றோம். இதன்காரணமாகவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
*சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றன.
* பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுடன் எனக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. ஆனால், 2018 டிசம்பர் மாதத்துக்கு பின்னர் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லை.
*21/4 தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்குகூட எதுவும் தெரியாது. அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் கேள்வி எழுப்பியிருக்கலாம். 21 ஆம் திகதி, சம்பவத்தின் பின்னரே எல்லாம் அறிவிக்கப்பட்டது.
*அமைச்சர் கபீர் ஹாசிமின் செயலாளர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
* சிரியா சென்றிருந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு புலனாய்வு பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
* சஹ்ரானுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
*ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது சாட்சியமளித்து வருகிறார்.
கருத்து தெரிவிக்க