இந்திய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தால் பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட முதலாவது இந்திய பிராந்தியமாக லடக் இடம்பெற்றுள்ளது என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் லடக் பிரதேசத்தை தனியான மாநிலம் என்ற ரீதியில் பெயரிடுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள த்விட்டேர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
லடக் பிரதேசத்தில் 100 க்கு 70 சதவீத பௌத்த மக்கள் வாழ்கின்றனர்.
தாம் லடக் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருப்பதாகவும் அதன் இயற்கை எளிலை சிறப்பான முறையில் அனுபவித்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்வதற்கு பொருத்தமான இயற்கை எளில் மிக்க பிராந்தியமாகும் என்றும் தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க