மாலபே தொழில்நுட்ப கல்வியகத்தின் மாணவர் 2009 ஆம் ஆண்டில் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டியதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் இன்று (ஆகஸ்ட் 6) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜோன்கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விரிவுரையாளர் நீல் பிரான்சிஸ் ஜோசப், மாணவர் நிபுன ராமநாயக்க மீதான தாக்குதல் வழக்கில் சாட்சியாக ஆஜரானபோது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பின்னர் மாணவர் கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, அவரது நிலையை ஆய்வு செய்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சி வாக்குமூல விசாரணைகள் ஆகஸ்ட் 27 ஆம் திகதி நடைபெறும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் அறிவித்தார்.
கருத்து தெரிவிக்க