விளையாட்டு செய்திகள்

கண் தெரியாத நடுவர் என ஜியோல் வில்சனை விமர்சித்த ரசிகர்

ஏஷஸ் தொடரில் தவறான முடிவுகளை வழங்கிய நடுவர் ஜியோல் வில்சனை கண்தெரியாதவர் என்று ரசிகர் விமர்சித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஏஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் திகதி ஆரம்பமானது . இதில் நாணய சுழட்சியில்வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கியஅவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 374 ஓட்டங்களை சேர்த்தனர்.

2-வது இன்னிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 487 ஓட்டங்களை சேர்த்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் போட்டியின் தொடக்கத்திலிருந்தே மேற்கிந்திய நடுவர் ஜியோல் வில்சன் மற்றும் மற்றொரு நடுவராக அலீம் தாரும் பல முறை தவறான தீர்ப்புகளை அளித்து அதிர்ச்சி அளித்தனர்.

இந்த இருவரும் இணைந்து 15க்கும் மேற்ப்பட்ட தவறான தீர்ப்புகளை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர் ஒருவர் மேற்கிந்திய நடுவர் அம்பயர் ஜியோல் வில்சனின் விக்கிப்பீடியா பக்கத்தில் சர்வதேச கண் தெரியாத நடுவர் என்று மாற்றினார்.

1966ம் ஆண்டு டிசம்பர் 30ம் திகதி டிரினாட், டோபாகோவில் பிறந்தவர் ஜியோல் வில்சன், இவர் ஒரு கண் தெரியாத சர்வதேச நடுவர் என்று திருத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இப்போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளர்களும், நடுவர்களின் முடிவுகளை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க