கைப்பந்து விளையாட்டுகளுக்கான தகுதிச்சுற்றில் பெண்கள் பிரிவில் செர்பியா அணி போலந்து அணியை வீழ்த்தியது, இதன் மூலம் 2020 டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான கைப்பந்து விளையாட்டின் தகுதிச்சுற்றுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் பெண்கள் பிரிவுக்கான ஆட்டங்கள் போலந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. போலந்து தலைநகர் வார்சாவில் செர்பியா அணியும் போலந்து அணியும் மோதின. இதில் செர்பியா அணி 21-25, 25-23, 25-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
செர்பியா அணி இதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் பியுர்டோ ரீகோ அணிகளை வீழ்த்தியிருந்தது.
இதே போன்று ஆண்கள் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9-ம் திகதி ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க