உள்நாட்டு செய்திகள்புதியவை

தெரிவுக்குழுவின் முன்னிலையில் அமைச்சர் சாகல சாட்சியம்

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் தற்போது அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆஜராகி சாட்சியம் வழங்கி வருகிறார்.

இன்று தெரிவுக்குழுவின் முன் சாட்சியங்களை வழங்கவுள்ள நான்கு அமைச்சர்களில் முதலாவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜவர்தன வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் வாக்குமூலம் வழங்கவுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக பிரதி சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க