ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கும் நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகத் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை வேட்பாளர் தெரிவில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து மஹிந்த ஜனாதிபதி மைத்திரி இருவரும் இணைந்து தீர்மானிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் தனது தீர்வை தெரிவிக்கதாதால் தீர்க்கமாக எதையும் கூற முடியாதுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு ஜனாதிபதியை நீதிமன்றத்தை நாடுமாறு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
டிசம்பருக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தான் பதவி விலகுவதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாகவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க