அடுத்த அவருடத்துக்கான முதலாம் தவணைக்கு முன்னதாக தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்களை நிறைவு செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் இது வரையில் கிடைத்துள்ளன.
ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் சேவை செய்த 2000 ஆசிரியர்களின் விண்ணப்பங்களும் இதில் உள்ளடங்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு முதல் அமுல்ப்படுத்தப்படும் மேற்படி திட்டத்துக்கு அமைய, 2017 ஆம் ஆண்டு 12,000 ஆசிரியர்களும் , கடந்த வருடம் 5000 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க