உள்நாட்டு செய்திகள்புதியவை

வரி திருத்த வரைபு பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட வரி (வெட்) தொடர்பான திருத்த வரைவு பிரேரணைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த திருத்தங்களின் கீழ் சுற்றுலா சபையில் பதிவுசெய்யப்பட்ட உணவகங்கள், விடுதிகள் மற்றும் உள்ளூர் வணிக வங்கிகள் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் பணம் பெறுதல் போன்றவற்றுக்கு தேச கட்டட வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதற்காக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

அதே நேரத்தில், பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நோக்கங்களுக்காக படகுகள் மற்றும் பிற கப்பல்களை இறக்குமதி செய்பவர்களுக்கும் தேச கட்டட வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க