உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யானைகளின் அட்டகாசம்; விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை’

அன்மைக் காலங்களானக வவுனியாவில் கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் நுளைந்து விவசாய நிலங்களையும் பயன்தரும் மரங்களையும் பாரியளவில் சேதப்படுத்துகின்றது.
இதனால் விவசாயத்தை முற்றுமுழுதாக நம்பிவாழும் விவசாயிகள் விசம்  அருந்தி தற்கொலை செய்யுமளவுக்கு உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வவுனியா கனகராயன்குளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் பிரதான வாழ்வாதாரமாகக் தெங்குப் பயிற்செய்கை காணப்படுகின்றது.
இந் நிலையில் நேற்று நல்லிரவு  மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம் சுமார் 75 தொடக்கம் 80 வரையான நிறை காயுடன் காணப்பட்ட தென்னை மரங்களையும் 15ற்கும் மேற்பட்ட வாளைமரங்களையும், நூறு அடிக்கு மேற்பட்ட மரவள்ளி மரங்களையும் பிடுங்கி சேதப்படுத்தியுள்ளது.
சுமார் 7 வருடங்கள் கிணற்றிலிருந்து நீர்பாச்சி தங்களுடைய பிள்ளைகளைப்போல பராமரித்து வந்த தென்னம் பிள்ளைகள் பயன்தரும் காலம் வரும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சேதப்படுத்தியதால் மனரீதியில் பாதிக்கப்பட் விவசாயிகள் விசமருந்தி உயிரை மாய்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகளில் தொல்லையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு விவசாய அழிவு நிவாரணம் மற்றும் யானைக்கான மின்சார வேலி அமைத்து வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந் நிலை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் தமிழ் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க