அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சாட்சி வாக்குமூலங்கள் ஆகஸ்ட் 28 ஆம் திகதி பெறப்படும் என உச்சநீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 6) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது, ஒரு தனியார் ஊடக வலையமைப்பைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
ஒரு தனியார் ஊடகத்துடன் இணைக்கப்பட்ட மற்றொரு செய்தியாளர் அடுத்த விசாரணையின் போது சாட்சி அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாயக்க தனது உயர்தர தேர்வுகளுக்கு அமர வேண்டியிருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று செய்தியாளர் சந்திப்பில் நீதித்துறைக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க