மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட காட்மோர் நெடுஞ்சாலை, டீசைட் சந்தியில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தூதூரத்தை கொண்டதாகும் .
நீண்ட காலமாக இந்த பாதை மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட நிலையில் இந்த பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்ததது குறிப்பிடத்தக்கது.
இது விடயமாக இப்பிரதேச மக்களால், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதற்கமைய, கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அன்று அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பாதை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
6 கிலோ மீற்றர் நீளமான இந்த பாதையில் இன்னும் 2.5 கி மீ பாதை சீர் செய்யப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .
இதனால் தாம் தொடர்ந்தும் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கி வருவதாகவும் குறித்த பாதை ஏன் இடைநிறுத்தப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர் .
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
கருத்து தெரிவிக்க