காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து ரத்துச்செய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
காஸ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இது தொடர்பான யோசனை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
குறிப்பாக காஷ்மீர் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாநிலத்திலும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
எனவே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்கும் வகையில், நாளை மறுநாள் 7 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவையிலும், ஜம்மு காஷ்மீர் தொடர்பான யோசனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், மோடி உரையாற்றுவார் எனத்தெரிகிறது.
கருத்து தெரிவிக்க