உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

முதல் ஏஷஸில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

பேர்மிங்காமில் நடந்த இந்தப்போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 284 ஓட்டங்களையும் இங்கிலாந்து 374 ஓட்டங்களையும் எடுத்தன.

இந்தநிலையில் 90 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, 112 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 487 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இதையடுத்து, 398 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 146 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

கருத்து தெரிவிக்க